ஆங்கிலத்தின் ஒலிகள் - பாடம் 1 ---/2
ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் உள்ளன. இவற்றிலிருந்து தொடுங்குவோம் வாங்க..
ஆங்கிலத்தின் முதல் எழுத்து
a
இதைத் தலைப்பு எழுத்தாக எழுதும்போது
A
இதை தனி எழுத்தாக சொல்லும்போது ஏ என்று நாம் உச்சரிக்கிறோம்.
முதல் பாடத்தில் இந்த ஒலியுடன் கூடிய சில ஆங்கில சொற்களைப் பார்த்தோம்.
இன்னும் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
கிரேப் (grape) திராட்சை
grape juice (கிரேப் ஜூஸ்) குடித்தேன் என்று சொல்லலாம்...ஆனால்
grapes (கிரேப்ஸ்) வாங்கிவந்தேன் என்று சொல்ல வேண்டும். ...யாரும் ஒரே ஒரு திராட்சை வாங்கிவருவது இல்லை அல்லவா?
கிரேப் ஜூஸ் இஸ் குட் போர் ஹெல்த் (Grape juice is good for health)
கிரேப்ஸ் ஆர் குட் போர் ஹெல்த் (Grapes are good for health)
பிரேவ் (Brave) -- துணிச்சல் உள்ள
ஹீ இஸ் அ பிரேவ் boy - He is a brave boy
ஷீ இஸ் அ பிரேவ் girl - She is a brave girl
ஷேவ் (shave) - ஷவரம்
ஹீ ஷேவ்ஸ் எவ்ரி டே (He shaves every day) (அவன் ஒவ்வொருநாளும் முகக்ஷவரம் செய்து கொள்கிறான்)
ஆனால் இந்த உச்சரிப்பு, சில சொற்களில், ஏ (
a) என்ற எழுத்தால் மட்டும் குறிக்கப்படுவதில்லை...வேறு சில எழுத்துக்களாலும் குறிக்கப்படுகிறது...
இதோ பாருங்கள் --
1. ஹி இஸ் கிரேட் - He is great - என்பதில் கிரேட்டின் நீண்ட ஏ (
a) சவுண்ட்
ea
என்ற எழுத்துக்களால் சுட்டப்படுகிறது. break என்ற சொல்லிலும் இப்படித்தான்,
2. கிரே (grey) என்ற சொல், சாம்பல் நிறத்தைக் குறிக்கிறது.
இந்த சொல்லில் நீண்ட ஏயின் (
a) ஒலி,
வெறும் ஈ (
e) என்ற எழுத்தால் சுட்டப்படுகிறது.
தே (they) (அவர்கள்) என்ற சொல்லிலும் இப்படித்தான், நீண்ட ஏயின் (
a) ஒலி
வெறும் ஈ (
e) என்ற எழுத்தால் சுட்டப்படுகிறது.
3.
கேஜ் (gauge) என்ற சொல்லில் ஏகார ஓலி,
au
என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகிறது ;Gauge என்பது
metre gauge, broad gauge என்று வரும். அளவைக் குறிக்கும்.
Gauge என்பது வினைச்சொல்லாக வரும் போது, அளவிடுதல், சீர்தூக்கிப்பார்த்தல் என்ற பொருளில் வரும்
4. weigh (நிறுத்தல், எடை பார்த்தல்), என்ற சொல்லில், ஏகார ஓலி
ei
என்ற எழுத்துக்களால் உச்சரிக்கப்படுகிறது. weigh மற்றும் way ஆகிய இரு சொற்களின் உச்சரிப்பும் ஒன்றுதான்.
இவை பழக பழக எளிதாகிவிடும். துளிகூட அஞ்சவேண்டியது இல்லை.
x